முன்மொழிவுகள் ஜனாதிபதியிடம்..?

Friday, 14 February 2020 - 9:29

%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D..%3F
புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்கும்போது கவனத்திற்கொள்ள வேண்டிய விடயங்களை உள்ளடக்கிய முன்மொழிவுகள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
 
இலங்கை மன்றக் கல்லூரியில் நேற்று இடம்பெற்ற 'பலமானதொரு அரசு – எமது அரசியலமைப்பொன்றுக்கான முன்மொழிவுகள்' என்ற கருப்பொருளின் கீழ் இடம்பெற்ற நிகழ்வின் போதே இந்த முன்மொழிவுகள் கையளிக்கப்பட்டுள்ளன.
 
எமக்கு உரிமையுள்ள பலமான அரசை மீண்டும் உருவாக்குதல், உண்மையான மக்கள் பிரதிநிதித்துவம் மற்றும் மக்கள் இறைமை, ஒற்றை ஆட்சியை நாட்டில் உறுதிப்படுத்தல், நிறைவேற்றுத்துறை, சட்டவாக்கத்துறை மற்றும் நீதித்துறைகளுக்கிடையில் அதிகார சமநிலை மற்றும் கடமையை முதன்மையாகக்கொண்ட சமூகம் என்ற ஐந்து இலக்குகளை கொண்டமைந்த முன்மொழிவுகள் தயாரிக்கப்பட்டுள்ளன.
 
'யுத்துகம' என்ற அமைப்பின் தலைவர் கெவிது குமாரதுங்கவினால் குறித்த முன்மொழிவுகள் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்;டுள்ளன..