ஏப்ரல் 21 தாக்குதல் குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு முன்னிலையாகுமாறு தும்மலசூரிய காவல்துறை பொறுப்பதிகாரி மற்றும் பிரதான காவல்துறை பரிசோதகர் அத்துல குமார கமமே ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 21 தாக்குதலுக்கு முன்னர் தும்மலசூரிய காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட முஸ்லீம் பள்ளிவாசல் ஒன்றுக்கு தாக்குதல் நடாத்தப்பட்டது.
இந்த விடயம் தொடர்பில் தும்மலசூரிய காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.
அத்துடன் ஏப்ரல் 21 தாக்குலை நடாத்திய சஹ்ரான் ஹாஷிமுடன் தொடர்பு வைத்திருந்த ஒருவர் தும்மலசூரிய காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருந்தார்.
மேலும் கைது செய்யப்பட்ட குறித்த நபரின் ஆதரவாளர்கள் இருவர் தும்மலசூரிய காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு குற்றுப்புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
இதன் பின்னணியிலேயே ஏப்ரல் 21 தாக்குதல் குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு முன்னிலையாகுமாறு தும்மலசூரிய காவல்துறை பொறுப்பதிகாரி மற்றும் பிரதான காவல்துறை பரிசோதகர் அத்துல குமார கமமே ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.