சிங்கமலை பகுதியில் பரவிய காட்டுத்தீ கட்டுப்பாட்டுக்குள்..

Friday, 14 February 2020 - 10:57

%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D++%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80+%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D..
ஹட்டன் - சிங்கமலை வனப்பகுதியில் பரவிய காட்டுத்தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
 
இந்த காட்டுத்தீயை கட்டுப்படுத்த வான்படைக்கு சொந்தமான பெல் 12 ரக உலங்கு வானூர்தி பயன்படுத்தப்பட்டது.

ஹட்டன் காவற்துறை பிரிவிற்குட்பட்ட பிரதான குடிநீர் பிறப்பிடமான  சிங்கமலை வனப்பகுதியை இனந்தெரியாத சிலர் எரியூட்டியுள்ளனர்.

இதன்காரணமாக பல ஏக்கர் வனப்பரப்பு எரியுண்டுள்ளது.
 
இந்த தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கான நடவடிக்கையில் பொது மக்கள், ஹட்டன் டிக்கோயா நகர சபையின் தீயணைப்பு படை பிரிவினர் மற்றும் காவற்துறையினர் மேற்கொண்டனர்.
 
எனினும், வறட்சியான காரணமாக தீப்பரவலை கட்டுப்படுத்த முடியவில்லை.
 
இந்நிலையில் வன பாதுகாப்பு திணைக்களம் வான் படையின் உதவியினை கோரியுள்ளது.
 
இதனையடுத்து பெல் 12 ரக உலங்கு வானுர்தி அழைக்கப்பட்டு தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக எமது செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.