பிரதேச கைத்தொழில் பேட்டைகளில் தொழிற்சாலைகளை அமைப்பதற்கு காணிகளை ஒதுக்கீடு செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
தொழில் பேட்டைகளில் இதற்கான திட்டங்களை ஆரம்பிப்பதற்காக முன்வந்துள்ள 8 முதலீட்டாளர்களுக்கு இந்த வசதி செய்து கொடுக்கப்படவுள்ளதாக தெரிய வருகின்றது.
தொழிற்சாலை மற்றும் விநியோக முகாமைத்துவ அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படும் பிரதேச தொழில்பேட்டை அபிவிருத்தி வேலைத்திட்டம் தொழிற்சாலை மேம்பாட்டை நோக்காக கொண்டு நடைமுறைப்படுத்தப்படுகின்றது.
இந்த வேலைத்திட்டத்தின் கீழ் தொழில் பேட்டை திட்டத்தை ஆரம்பிப்பதற்காக 8 முதலீட்டாளர்களுக்கு காணியை ஒதுக்கீடு செய்யும் அமைச்சின் திட்ட மதிப்பீட்டு குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளது.
இந்த முதலீட்டாளர்களினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள திட்ட பரிந்துரையை நடைமுறைப்படுத்துவதற்காக 726 தசம் 3 மில்லியன் ரூபா முதலீடு செய்யப்படவுள்ளது.
அத்தோடு இதன் மூலம் நேரடியாக 270 பேருக்கு தொழில்வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
இதற்கு அமைவாக இந்த காணிகள் அடையாளம் காணப்பட்டு முதலீட்டாளர்களுக்கு ஒதுக்கீடு செய்வதற்காக தொழிற்சாலை மற்றும் விநியோக முகாமைத்துவ அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணத்துக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.