நிலாவௌி லட்சுமி நாராயணா கோயிலில் நடந்தது என்ன....? திடுக்கிடும் உண்மை சம்பவம்...!

Friday, 14 February 2020 - 11:47

%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%8C%E0%AE%BF+%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%BE+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9....%3F+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88+%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D...%21
பிரசித்தி பெற்ற கோயிலான லட்சுமி நாரயணா பெருமாள் கோயில் நிலாவௌி 6 ஆம் மைல்கல் பகுதியில் அமைந்துள்ளது.

இந்த கோயில் இந்தியர் ஒருவரால் நிர்வகிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

லட்சு நாராயணா கோயிலில் கடமையாற்றுவதற்காக இந்தியாவிலிருந்து கடந்த 06 ஆம் திகதி இளைஞர் ஒருவர் வரவழைக்கப்படுகின்றார்.

6 ஆம் திகதி வருகை தந்த ஆந்திர பிரதேசத்தை சேர்ந்த குறித்த இளைஞர் லட்சுமி நாராயணா கோயிலில் பிரதான குருக்களுக்கு உதவியாளராக கடமையாற்றி வந்துள்ளார்.

இலங்கைக்கு வருகை தந்து நான்கு தினமே கடந்திருந்தது.

கடந்த 10 ஆம் திகதி இலங்கைக்கு இறைத்தொண்டு ஆற்ற வந்த குறித்த இளைஞருக்கு நேர்ந்தது என்ன என்பது தொடர்பில் இதுவரை மர்மமாகவே காணப்படுகின்றது.

19 முதல் 21 வயது வயது மதிக்கத்தக்க குறித்த இளைஞர் கோயிலின் வளாகத்தில் அமைந்துள்ள பூசகர்களின் உதவியாளர்கள் தங்கும் அறையில் காணப்பட்ட மின்விசிறியில் கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நிலாவௌி காவல் துறையினருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் காவல் துறையினர் குறித்த இளைஞரின் சடலத்தை மீட்டு சட்ட வைத்திய பரிசோதனை நடத்ததிய பின்னர் பின்னர் திருகோணமலை வைத்தியசாலையில் வைத்துள்ளனர்.

அவர்களின் உறவினர்களின் கோரிக்கைக்கு அமைய சடலத்தை இந்தியாவிற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக நிலாவௌி காவல் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

எனினும் இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ள எமது செய்தி பிரிவினர் பல வினாக்களுடன் ஆலய பரிபாலன சபையினர், பிரதான குருக்கள், காவல் துறையினரை தொடர்பு கொண்டனர்.

முதலாவதாக ஆலயத்தின் தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்தியபோது எம்மோடு உரையாடியவர்

கேள்வி : பூசகரின் உதவியாளர் மரணம் தொடர்பில் தகவல் தேவை
பதில் : ' அண்ணன் நான் விடுமுறையில் சென்றிருந்தேன் என கோபமாக உரையாடினார்.
கேள்வி: -சரி ஆலயத்தில் பணியாற்றியவர்கள் எவரேனும் இருக்கின்றார்களா?
பதில் :- இல்லை ஆலயத்திற்கு பொறுப்பான ஒருவர் இருக்கின்றார். அவரின் இலக்கத்தை தருகின்றேன்.


அவரால் வழங்கப்பட்ட 026 ******** என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்தினோம்.

கேள்வி : ஐயா வணக்கம். எனக்கு தற்கொலை செய்து கொண்ட இளைஞன் தொடர்பில் தகவல் வேண்டும் நாங்கள் சூரியன் இணையத்தள செய்திபிரிவிலிருந்து தொடர்பு கொள்கின்றோம்.

பதில் : சேர் இது ஆலயத்துடன் இணைந்த அதே நிர்வாகத்திற்குரிய ரெஸ்டூரண்ட் எங்களுக்கு தெரியாது.

கேள்வி : சரி பொறுப்பான ஒருவரின் இலக்கத்தை தந்துதவுங்கள் என கோரினோம்.

பதில் : இவர்தான் நிர்வாகப் பொறுப்பாளர் என 077 ******** என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்துங்கள்.

கேள்வி : இவருக்கு விபரம் தெரியமா

பதில் : அவர்தான் அன்றைய தினம் அனைத்து விசாரணைகளுக்கும் பதிலளித்தார்.

இந்நிலையில் அவர் கொடுத்த அந்த கையடக்க தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்தினோம்.

கேள்வி : அவரின் பெயரின் குறிப்பிட்டு ஐயா நீங்களா கதைக்கின்றீர்கள். என வினவி என்னையும் அடையாளப்படுத்திக்கொண்டேன்.

பதில் : சொல்லுங்கோ தம்பி

கேள்வி : தற்கொலை விவகாரம் தொடர்பில் எனக்கு சில தகவல்கள் வேண்டும்

பதில் : என்ன தகவல் வேண்டும் அனைத்தையும் தருகின்றேன்

கேள்வி :-
01 குறித்த இளைஞர் இந்தியா ஆந்திர பிரதேசத்தை சேர்ந்தவரா ?
02 இலங்கைக்கு வருகை தந்த தினம் ?
03 திருகோணமலைக்கு எப்போது வருகை தந்தார் ?
04 அவர் தனது தொழிலை ஆரம்பித்த திகதி ?
05 10 ஆம் திகதி மாலை நேர பூஜையில் பங்கேற்றாரா?
06 அவருக்கு ஏதேனும் நோய்கள் காணப்பட்டதா?
07 அவருக்கு காதல் விவகாரங்கள் ஏதேனும் இருந்ததா?
08 உடற்கூற்று பரிசோதனைகளில் என்னமாதிரியான விபரங்கள் கிடைக்கப்பெற்றன?
09 ஆலயத்தில் எவருடனும் முரண்பாடுகள் காணப்பட்டதா?
10 அவர் தங்கியிருந்த அறையில் வேறெவரும் தங்கியிருந்தனரா?

உள்ளிட்ட பல கேள்விகள் முன்வைத்தோம்.

பதில் : பிரதான குருக்களுடன் உரையாடிவிட்டு மீண்டும் உங்களுடன் உரையாடுகின்றேன். 10 நிமிடங்களின் பின்னர் மீண்டும் அழைப்பினை ஏற்படுத்துங்கள்.

எமது செய்தி பிரிவு மீண்டும் அவருக்கு அழைப்பினை ஏற்படுத்திய போது அவருடைய கையடக்க தொலைபேசி இயங்கவில்லை.

உடனடியாக நிலாவௌி காவல் நிலைய பொறுப்பதிகாரி அனில் ஜயசிங்கவிற்கு அழைப்பினை ஏற்படுத்தினோம். அவர் காவல் துறை ஊடகப்பிரிவில் தகவல்களை பெற்றுக்கொள்ளுமாறு வேண்டினார்.

இந்நிலையில் காவல் துறை தலைமை அலுவலகத்திற்கு அழைப்பினை ஏற்படுத்தி ஊடகப்பிரிவுடன் உரையாடிய போது இந்த சம்பவம் தொடர்பில் பதிவேற்றப்பட்டுள்ள செ்யதியின் ஆரம்ப பந்தியில் காணப்பட்ட விடயங்கள் மாத்திரமே வழங்கப்பட்டது.

மேலும் இந்த சம்பவத்தினை ஊடகங்களுக்கு வழங்க வேண்டாம் எனவும், ஊடகங்களில் வௌிவருமாயின் ஆலயத்திற்கு அவப்பெயர் ஏற்படும் என நிலாவௌி லட்சுமி நாராயணா பெருமாள் ஆலய பணிப்பாளர்கள் செய்தியாளர்களிடம் கேட்டுக்கொண்டதாகவும் எமக்கு தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.