ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க மற்றும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச இன்றைய தினம் தங்களது கட்சி பிரதிநிதிகளுடன் தனித்தனியான சந்திப்புக்களை நடத்தவுள்ளனர்.
இதன்படி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அற்ற ஐக்கிய தேசிய கட்சியின் தொகுதி அமைப்பாளர்களை எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச சந்திக்கின்றார்.
இந்த சந்திப்பு நாடாளுமன்ற கட்டிட தொகுதியில் இடம்பெறுகிறது.
அதே கட்சியை சேர்ந்த உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களில் ஒரு தொகுதியினரை மற்றும் ஒரு கலந்துரையாடலுக்காக கட்சியின் தலைவர் ரணில் விக்ரசிங்க சந்திக்கவுள்ளார்.
கட்சியின் தலைமைத்துவத்தின் அறிவித்தலுக்கு அமைய ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் தலைமையில் தற்சமயம் இந்த கலந்துரையாடல் இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் சந்திப்பொன்றை நடத்துகின்றார்.
இன்று முற்பகல் 10 மணிக்கு ஆரம்பமான இந்த சந்திப்பு தற்சமயம் வரை இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை எதிர்வரும் பொது தேர்தலில் போட்டியிடவுள்ள சின்னம் தொடர்பில் தீர்மானம் ஒன்றை மேற்கொள்வதற்காக இரண்டு தரப்பினரால் நியமிக்கப்பட்ட குழு இன்று பிற்பகல் 2.30 அளவில் ஒன்று கூடவுள்ளது.