மேலும் 121 பேர் பலி

Friday, 14 February 2020 - 13:53

%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+121+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF
கொவிட் 19 தொற்று காரணமாக சீனாவில் மேலும் 121 பேர் பலியாகியுள்ளனர்.

சீனாவின் வூபேய் மாகாணத்தில் மாத்திரம் புதிதாக 116 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனடிப்படையில் கொவிட் 19 தொற்று காரணமாக உலகளாவிய ரீதியாக பலியானவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 489 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் 4 ஆயிரத்து 823 பேர் புதிதாக கொவிட் 19 தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கொவிட் 19 தொற்று காரணமாக அந்த பிராந்தியத்தில் மாத்திரம் இதுவரை 51 ஆயிரத்து 986 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் சீனாவில் கொவிட் 19 தொற்றால் இதுவரை 65 ஆயிரம் பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொவிட் - 19 தொற்று காரணமாக தமது நாட்டின் பொருளாதாhரம் பாதிக்கப்படுவதாக சிங்கப்பூரின் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அந்த நாட்டு ஊடகங்களுக்கு அவர் நேற்றைய தினம் கருத்துரைத்த போதே இதனை குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு பொருளாதார பாதிப்பை சமாளிப்பதற்கு அரசாங்கம் உதவுமெனவும் சிங்கப்பூரின் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும் தனியார் நிறுவனங்கள் மற்றும் தொழிற்சங்களுடன் இணைந்து செயலாற்றுவதற்கு அரசாங்கம் தயாராகவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை கொவிட் 19 தொற்று காரணமாக ஜப்பானில் முதலாவது மரணம் பதிவாகியுள்ளது.

ஜப்பானின் கனகாவா பிராந்தியத்தை சேர்ந்த 80 வயதான பெண் ஒருவர் பலியானதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.