ரிசாட் மனைவியின் மற்றுமொரு வீடு....!

Friday, 14 February 2020 - 14:11

%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81....%21
நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சியின் போது மொத்த கூட்டுறவு விற்பனை நிலையமான சதொசவில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் சர்ச்சைக்குரிய கொடுக்கல் வாங்கள்கள் தொடர்பிலான ஆவணங்கள் மீட்கப்பட்ட வீடானது முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீனின் மனைவிக்கு சொந்தமான வீீடு என  குற்றப்புலனாய்வு திணைக்களம் கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றிற்கு அறிவித்துள்ளது.

ஆவணங்கள் மீட்கப்பட்ட குறித்த வீடானது வௌ்ளவத்தையில் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பில் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் மனைவியிடம் சாட்சியம் ஒன்றை பதிவு செய்துகொள்வதற்கு எதிர்பார்த்துள்ளதாக அந்த திணைக்களம் கல்கிஸ்ஸ பிரதான நீதவான் மொஹமட் மிஹால் இற்கு சமர்ப்பித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த வீட்டில் தங்கியிருந்த நிலையில் கைது செய்யப்பட்ட மொஹமட் இம்ரானுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள நிதி மோசடி குற்றச்சாட்டு தொடர்பிலான வழக்கும் நிரூபிக்கப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வு தினணக்களம் அறிவித்துள்ளது.

அத்துடன் குறித்த வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களுடன் 9 கோடியே 35 லட்சம் பெறுமதியான நிதிக்குரிய உறுதியளிக்கப்பட்ட ஆவணங்கள் மீட்கப்பட்டுள்ள போதிலும் 9 லட்சத்து 35 ஆயிரம் ரூபா பொறுமதியான நிதி பரிமாற்றத்திற்குரிய உறுதியளிக்கப்பட்ட ஆவணங்களே காணப்பட்டதாகவும் இம்ரான் மொஹமட் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான காரணங்களை பரிசீலித்து பார்ப்பதற்காக குறித்த வழக்கு மீதான விசாரணைகளை எதிர்வரும் 28 ஆம் திகதி வரை  ஒத்திவைக்குமாறு நீதவான் அறிவித்துள்ளார்.