பேஸ்புக்கில் முதலிரண்டு இடத்தையும் பிடித்துள்ள பிரபலங்கள் இவர்கள்தான் - பேஸ்புக் நிறுவனர் தகவல்

Sunday, 16 February 2020 - 16:27

%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%87%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D+-+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D+
உலக அளவில் பெரும்பான்மையான இணைய பாவனையாளர்களால் ‘பேஸ்புக்’ சமூக வலைத்தளம் பயன்படுத்தப்படுகிறது.

இந்நிலையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் பேஸ்புக்கில் முதலிடத்தில் இருப்பது யார் என்ற உண்மையை வெளியிட்டுள்ளார்.

அதன்படி அமெரிக்க அதிபர் டிரம்ப் முதல் இடத்தில் உள்ளதாகவும் அவருக்கு அடுத்தப்படியாக பிரதமர் மோடி இரண்டாம் இடத்தில் இருப்பதாக தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் இது தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் டுவிட்டரில் வெளியிட்டுள்ள ஒரு செய்தியில்,

‘பேஸ்புக்’ சமூக வலைத்தளத்தில் டொனால்டு டிரம்ப் முதல் இடம், இரண்டாம் இடம் இந்திய பிரதமர் மோடிக்கு என்று சமீபத்தில் மார்க் ஜூக்கர்பெர்க் கூறி இருக்கிறார். இதை மிகப்பெரிய கௌரவம் என்று கருதுகிறேன்.

இன்னும் 2 வாரங்களில் நான் இந்தியாவுக்கு செல்கிறேன். இந்த பயணத்தை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருப்பதாகவும் ட்ரம்ப் தெரிவித்தார்.