மலிங்க மற்றும் திசரவுக்கு கிடைத்துள்ள வாய்ப்பு..!

Friday, 28 February 2020 - 9:55

%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81..%21+
ஆசிய பதினொருவர் அணியில் விளையாடுவதற்காக இலங்கையின் வேகப்பந்து வீச்சாளர் மாலிங்க மற்றும் சகலதுறை ஆட்டக்காரர் திசர பெரேரோ ஆகியோர் இணைக்கப்பட்டுள்ளனர்.

ஆசிய பதினொருவர் அணியும் உலக பதினொருவர் அணியும் எதிர்வர் மார்ச் மாதம் 21 ஆம் மற்றும் 22 ஆம் திகதிகளில் பங்களாதேஷில் வைத்து இரண்டு இருபதுக்கு இருபது போட்டிகளில் மோதுகின்றன.

பங்களாதேஷ் நாட்டின் தந்தை என்று அழைக்கப்படுபவரும் அந்த நாட்டின் முதலாவது ஜனாதிபதியுமான ஷேக் முஜிபுர் ரகுமானின் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இந்த போட்டி அமையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் ஆசிய பதினொருவர் அணிக்கு இந்திய அணியின் ஷிக்கர் தவான், ரிஷாப் பண்ட், குல்தீப் யாதவ், மொஹமட் ஷமி, ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளதாகவும், ஒரு போட்டிக்கு மாத்திரம் விராட் கொஹ்லி மற்றும் லோகேஷ் ராகுல் ஆகியோரை இணைத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக பதினொருவர் அணிக்காக இங்கிலாந்து அணியின் வீரர்களான அலெக்ஸ் ஹாலெஸ், ஜோனி பேரிங்டோ, மேற்கிந்திய அணி வீரர்களான கிறிஸ் கெய்ல், கீரன் பொல்லார்ட், நிகோலஸ் பூரன், செல்ட்டன் கொட்ரெல், சிம்பாப்வே அணியை சேர்ந்த பிரண்டன் டெய்லர், தென்னாப்பிரிக்க அணியை சேர்ந்த டுபிலெசிஸ் நிகிடி, அவுஸ்திரேலிய அணியை சேர்ந்த அண்ட்ரூ டை நியுசிலாந்து அணியை சேர்ந்த மிட்சல் மெக்லெனஹான் ஆகியோர் விளையாடுகின்றனர்.