கொரோனா வைரஸ் காரணமாக "அண்ணாத்த" திரைப்படத்தின் படபிடிப்பு ரத்து....!

Thursday, 05 March 2020 - 16:44

%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE+%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95+%22%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%22+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81....%21
சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் அண்ணாத்த படத்தின் படபிடிப்பு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் ரஜினிகாந்தின் 168-வது திரைப்படத்தை சிறுத்தை சிவா இயக்குகின்ற நிலையில், இந்தப் படத்திற்கு ‘அண்ணாத்த’ என பெயரிடப்பட்டுள்ளது.
இத்திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ், பிரகாஷ் ராஜ், குஷ்பு, மீனா, சூரி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.திரைப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார் என்பதோடு இப்படத்தை இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியிட படக்குழுத் திட்டமிட்டுள்ளது.

தற்போது ஹைதராபாத்திலுள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் தொடங்கி படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில் மேலும் மார்ச்-ஏப்ரல் மாதங்களில் புனே - கொல்கத்தாவில் படப்பிடிப்பு நடைபெறவுள்ளதாக கூறப்பட்டது. புனே-கொல்கத்தாவில் படப்பிடிப்பு நடைபெறவுள்ள இடங்கள் குறித்து படக்குழு இன்னும் முடிவுசெய்யவில்லை என்றும் தகவல் வெளியாகி இருந்து.

எனினும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக படபிடிப்புக்கள் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு கட்ட படப்பிடிக்கள் ஏற்கெனவே நிறைவடைந்துள்ள நிலையில் அடுத்த கட்டமாக கொல்கத்தா மற்றும் புனேவில் படப்பிடிப்பு நடத்த குழு திட்டமிட்டிருந்தது,

இருப்பினும் உலகெங்கும் பரவி வரும் கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக, வட மாநிலங்களில் படப்பிடிப்பு செய்வதற்கான திட்டங்களை படக்குழு கைவிட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.