இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சி

Tuesday, 24 March 2020 - 19:09

%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் சரிவடைந்துள்ளது.

மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களுக்கு அமைய அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 185 ரூபாய் 93 சதமாக பதிவாகியிருந்தது.

அத்துடன் விற்பனை பெறுமதி 190 ரூபாய் 61 சதம் என மத்திய வங்கி அறிவித்துள்ளது.

இலங்கையில் கொரோன வைரஸ் பரவி வரும் நிலையில் இவ்வாறு ரூபாவின் பெறுமதி சரிவடைந்து வருகிறது.

அத்துடன் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் பங்குச் சந்தை நடவடிக்கைகளும் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.

எனினும் அத்தியாவசியமற்ற இறக்குமதி பொருட்களுக்கு அரசாங்கம் தடை விதித்துள்மை குறிப்பிடத்தக்கது.