கொவிட்-19 தொற்று காரணமாக நேற்றைய தினம் மாத்திரம் 683 பேர் பலி

Thursday, 26 March 2020 - 8:58

%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D-19+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D+683+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF
இத்தாலியில் கொவிட்-19 தொற்று காரணமாக நேற்றைய தினம் மாத்திரம் 683 பேர் பலியாகியுள்ளனர்.

கொரோனா தொற்றின் தாக்கம் இத்தாலியின் தெற்கு பகுதியில் அதிகமாக காணப்படுவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதனடிப்படையில் கொவிட்-19 தொற்று காரணமாக இத்தாலியில் இதுவரையில் 7 ஆயிரத்து 503 பேர் பலியாகியுள்ளனர்.

வேறு எந்த நாடுகளிலும் ஏற்பாடாத அளவு உயிர் சேதங்கள் கொவிட்-19 தொற்று காரணமாக இத்தாலியில் பதிவாகியுள்ளது.

அத்துடன் இத்தாலியில் 5 ஆயிரத்து 210 பேர் புதிதான கொவிட்-19 தொற்றுக்கு உள்ளாகியுள்ளதன் அடிப்படையில் மொத்தமாக 74 ஆயிரத்து 386 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை இத்தாலியை தொடர்ந்து கொவிட்-19 தொற்று காரணமாக சீனாவில் பலியானவர்களின் எண்ணிக்கை விட ஸ்பெயினில் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

ஸ்பெயினில் கொவிட்-19 தொற்று காரணமாக 656 பேர் புதிதாக பலியாகியுள்ளனர்.

இதனடிப்படையில் ஸ்பெயினில் இதுவரையில் 3 ஆயிரத்து 647 பேர் பலியாகியுள்ளனர்.

அங்கு கொவிட்-19 தொற்றுக்கு உள்ளான 7 ஆயிரத்து 457 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு 49 ஆயிரத்து 516 பேர் இதுவரையில் கொவிட்-19 தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.

சிங்கப்பூரில் புதிதாக கொவிட்-19 தொற்றுக்கு உள்ளான 73 பேர் நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவ்வாறு புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளவர்களில் சிலர் முன்னதாக கொவிட்-19 தொற்றுக்கு உள்ளான 18 பேருடன் தொடர்புடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் கொவி;ட்-19 தொற்றுக்கு உள்ளான 631 பேர் இதுவரையில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அந்த நாட்டு சுகாதார அமைச்சு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை நேற்று அடையாளம் காணப்பட்டவர்களில் 38 பேர் வெளிநாடுகளில் இருந்து வருகை தந்தவர்கள் எனவும் குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் சிங்கப்பூரில் 160 பேர் குணமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் சர்வதேச ரீதியாக கொவிட்-19 தொற்றுக்கு உள்ளான 4 லட்சத்து 68 ஆயிரத்து 156 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் சர்வதேச ரீதியில் 21 ஆயிரத்து 180 பேர் கொவிட்-19 தொற்று காரணமாக பலியாகியுள்ளனர்.

எவ்வாறாயினும் சர்வதேச ரீதியாக ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 812 பேர் குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது,