Hirunews Logo
174+%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%9F%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF+%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D....%21
Saturday, 28 March 2020 - 19:16
174 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி வழங்க தீர்மானம்....!
36

Views
கொவிட்-19 தொற்று காரணமாக பாதிக்கப்பட்டுள்ள 64 நாடுகளுக்கு 174 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி வழங்க அமெரிக்கா தீர்மானித்துள்ளது.

இதனடிப்படையில் இலங்கைக்கு ஒன்று தசம் மூன்று மில்லியன் டொலர் நிதியுதவி வழங்கப்படவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அத்துடன் இந்தியாவுக்கு 2 தசம் 9 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேபாளத்திற்கு 1 தசம் 8 மில்லியன் அமெரிக்க டொலரும், பங்களாதேஷிற்கு 3 தசம் 4 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

இதுதவிர ஆப்கானிஸ்தானில் கொவிட்-19 தொற்றை கட்டுபடுத்துவதற்கு 5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி வழங்குவதற்கும் அமெரிக்கா தீர்மானித்துள்ளது.
விளையாட்டுச் செய்தி

2020 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றவர்கள் 2021 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியிலும் நேரடியாக பங்கேற்கலாம் என சர்வதேச ஒலிம்பிக் குழு அறிவித்துள்ளது.

இந்த ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டி ஜப்பானில் எதிர்வரும் ஜூலை மாதம் 24 ஆம் முதல் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.

கொரோனா வைரஸ் காரணமாக ஒலிம்பிக் போட்டி ஒரு ஆண்டுக்கு தள்ளி வைக்கப்பட்டு 2021 ஆம் ஆண்டு இந்த போட்டி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் 2020 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றவர்கள் 2021 ஆண்டு இடம்பெறவுள்ள போட்டியில்; நேரடியாக பங்கேற்கலாம் என சர்வதேச ஒலிம்பிக் குழு அறிவித்துள்ளது.

ஜப்பான் ஒலிம்பிக் போட்டியில் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர் வீராங்கனைகள் கலந்துகொள்வதாக இருந்தனர்.

இதில் 57 சதவீதம் பேர் ஏற்கனவே போட்டியில் பங்கேற்பதற்கான தகுதியைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
Top