Hirunews Logo
%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+24+%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D++832+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF....%21
Saturday, 28 March 2020 - 19:19
கடந்த 24 மணித்தியாலங்களில் 832 பேர் பலி....!
458

Views
ஸ்பெயினில் கடந்த 24 மணித்தியாலங்களில் கொவிட்-19 தொற்று காரணமாக 832 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.

இதனடிப்படையில் ஸ்பெயினில் கொவிட்-19 தொற்று காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 690 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் ஸ்பெயினில் இதுவரையில் 72 ஆயிரத்து 248 பேர் கொவிட்-19 தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இத்தாலியை தொடர்ந்து தற்போது ஸ்பெயினில் அதிகளவான உயிரழப்புக்கள் ஏற்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் ஏப்ரல் 12 ஆம் திகதிவரை அவசர காலநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை தற்போது தென்கொரியாவில் கொவிட்-19 தொற்றுக்கு உள்ளாகுபவர்களை விட அதிகமானோர் குணப்படுத்தப்படுவதாக அந்த நாட்டு சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

தென்கொரியாவில் இன்றைய தினம் 146 பேர் புதிதாக கொவிட்-19 தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.

இதனடிப்படையில் தென் கொரியாவில் 9 ஆயிரத்து 478 பேர் இதுவரையில் கொவிட்-19 தொற்றுக்கு உள்ளான நிலையில் அடையாளம் காணப்பட்டனர்.

அவர்களில் 4 ஆயிரத்து 811 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதேவேளை அமெரிக்காவில் ஆயிரத்து 711 பேர் புதிதாக கொவிட்-19 தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.

இதனை அடுத்து அங்கு கொவிட்-19 தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்த 4 ஆயிரத்து 834 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை இத்தாலியில் இதுவரையில் கொவிட்-19 தொற்றின் காரணமாக பலியானோரின் எண்ணிக்கை 9 ஆயிரத்து 134 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் இத்தாலியில் இதுவரையில் 86 ஆயிரத்து 498 பேர் கொவிட்-19 தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தநிலையில் சர்வதேச ரீதியில் 6 லட்சத்து 14 ஆயிரத்து 411 பேர் கொவிட்-19 தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.

அத்துடன் சர்வதேச ரீதியில் பலியானவர்களின் எண்ணிக்கை 28 ஆயிரத்து 243 ஆக உயர்வடைந்துள்ளது.

எவ்வாறாயினும் ஒரு லட்சத்து 37 ஆயிரத்து 333 பேர் குணமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
Top