Hirunews Logo
%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88+%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D
Sunday, 29 March 2020 - 12:01
நியூயோக் நகரை தனிமைப்படுத்தும் அவசியம் இல்லை- அமெரிக்க அதிபர்
2,359

Views
நியூயோக் நகரை தனிமைப்படுத்தும் அவசியம் தற்போது இல்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

வெள்ளை மாளிகையின் கொரனா வைரஸ் தொடர்பான விசேட பணிக்குழுவின் பரிந்துரைக்கு அமையவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

முன்னதாக நியூயோக் நகரை கடுமையான முறையில் தனிமைப்படுத்த வேண்டிய நிலை ஏற்படும் என டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்திருந்தார்.

52 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கொரனாவைரஸ் தொற்றாளர்கள் நியூயோக்கில் பதிவாகியிருந்தனர்.

எப்படியிருப்பினும், நியூயோக், நியூஜேசி ஆகிய பிரதேசங்களில் தனிமைப்படுத்தும் நடவடிக்கைகளை கடுமையாக கடைப்பிடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறைந்தது 14 நாட்களுக்கு இந்த தடை அமுல்படுத்தப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

உட்கட்டமைப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளோருக்கு இது பொருந்தாது என அமெரிக்க நோய் கட்டுப்பாட்டு மற்றும் பாதுகாப்பு அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை சர்வதேச ரீதியாக கொரோனா வைரஸ் தாக்கி வரும் நிலையில், வடகொரியா இரு குறுந்தூர கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை இன்று ஏவியுள்ளது.

இந்த செயல்பாடு சர்வதேசத்தின் சீற்றத்திற்கு உள்ளாகியுள்ளது.

கிழக்கு கரையோர வொன்சன் பிரதேசத்தில் இருந்து இந்த ஏவுகணைகள் பிரயோகிக்கப்பட்டதுடன், அவை 19 மைல் வரை பயணித்துள்ளதாக தென் கொரிய இராணுவ தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

சர்வதேச ரீதியாக கொரோனா வைரஸ் குறித்து மக்கள் அச்சம் கொண்டுள்ள நிலையில், வடகொரியாவின் இப்படியான செயல்பாடுகள் ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்துள்ள தென் கொரியா இது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
Top