Hirunews Logo
%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+18+%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE+%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
Sunday, 29 March 2020 - 13:54
இலங்கையில் உள்ள 18 ஆயிரத்துக்கும் அதிகமான சர்வதேச சுற்றுலா பயணிகள்
38

Views
தற்போது சுமார் 18 ஆயிரத்து 93 சர்வதேச சுற்றுலா பயணிகள் இலங்கையில் உள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவர்களுக்கு தேவைப்படும் உதவிகள் இலங்கை சுற்றுலாத்துறை வெளிநாட்டு விவகார அமைச்சுடன் இணைந்து மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது இலங்கை வருகைக்கு தடைவிதிக்கப்பட்டுள்ள போதிலும், சுற்றுலா பயணிகள் வெளியேறுவதற்கான விசேட சேவைகளை ஸ்ரீ லங்கன் விமான சேவை மேற்கொள்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விசேட விமான சேவைகள் பிரித்தானிய, மெல்போன் மற்றும் நரிற்றா ஆகிய இடங்களுக்கு மேற்கொள்ளப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஊரடங்கு சட்ட காலத்தில் தாயகம் திரும்பும் சர்வதேச சுற்றுலா பயணிகள் விமான நிலையத்திற்கு செல்வதற்கான போக்குவரத்து உட்பட ஏனைய உதவிகள் இலங்கை சுற்றுலாத்துறை தரப்பினரால் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
Top