Hirunews Logo
%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%92%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D
Sunday, 29 March 2020 - 13:59
இலங்கை தேசிய ஒலிம்பிக் குழுவின் தலைவர் தெரிவித்துள்ள விடயம்
38

Views
இலங்கை குழுவில் ஒருவரை தவிர, ஏனையவர்கள் எவரும் ஒலிம்பிக் போட்டிகளுக்கு தகுதி பெறவில்லை என இலங்கை தேசிய ஒலிம்பிக் குழுவின் தலைவர் மக்ஸ்வெல் டீ சில்வா தெரிவித்துள்ளார்.

கொரனா வைரஸ் தொற்று காரணமாக “டோக்கியோ 2020” ஒலிம்பிக்ஸ் போட்டிகள் பிற்போடப்பட்டுள்ளன.

இந்த போட்டிகள் அடுத்த வருடத்திற்கு பிற்போடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அடுத்த வருட ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் கலந்து கொள்ளும் இலங்கை மெய்வல்லுனர்கள் பயிற்சிகளை பெற்று போட்டிகளில் பங்குகொள்ளும் தகைமையினை பெற வாய்ப்பேற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

ஒலிம்பிக்ஸ் போட்டிகளை பொறுத்த மட்டில், பண்டைய போட்டிகள் 1896 முதல் நவீனமயப்படுத்தப்பட்டன.

அன்று முதல் ஒலிம்பிக்ஸ் போட்டிகள் பிற்போடப்படவில்லை.

முதலாவது உலக மகா யுத்தத்தின் காரணமாக 1916 ஆம் ஆண்டிலும், இரண்டாவது உலக மகா யுத்தம் நிமித்தம் 1940 மற்றும் 1944 ஆம் ஆண்டுகளிலும் ஒலிம்பிக்ஸ் போட்டிகள் ரத்து செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
Top