Hirunews Logo
%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81..%21
Sunday, 29 March 2020 - 15:12
கொரோனா காரணமாக இராஜகிரியவின் முக்கிய பிரதேசம் மூடப்பட்டது..!
19,810

Views
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானதாக சந்தேகிக்கப்படும் பலர் ராஜகிரிய - ஒபேசேகரபுர - அருணோதைய மாவத்தையில் கண்டறியப்பட்டுள்ளனர்.

இதனை அடுத்து அந்த பகுதிக்கு உட்பிரவேசிப்பதற்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டேயின் மாநகர சபையின் பிரதான சுகாதார வைத்திய அதிகாரியின் ஆலோசனைக்கு அமைவாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்தனர்.

கடந்த 15 ஆம் திகதி மதபோதகர் ஒருவரால் சூரியவெவ பகுதியில் ஆராதனை ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் அதில் பிரதேசவாசிகள் பலர் பங்கேற்றுள்ளனர்.

அந்த ஆராதனையில் பங்கேற்றிருந்த பலருக்கு கொரோனா வைரஸ் அறிகுறிகள் ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவத்துடன் ஒபேசேகரபுர - அருணோதைய மாவத்தையில் வசிக்கும் நபர்கள் விசேட மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

எனினும், குறித்த ஆராதனையை ஏற்பாடு செய்திருந்த மதபோதகர் தேவாலயத்தை மூடிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதேவேளை, வெளிநாடுகளுக்கு சென்றிருந்த சிலரும் அருணோதய மாவத்தையில் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
Top