Hirunews Logo
%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+3+%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE+%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81..%21
Sunday, 29 March 2020 - 18:55
குரேசியாவின் 3 குத்துச்சண்டை வீரர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று..!
55

Views
குரேசியாவியைச் சேர்ந்த 3 குத்துச்சண்டை வீரர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இவர்கள் ஏற்கனவே லண்டன் ஒலிம்பிக்ஸ் தகுதிச் சுற்றில் பங்கேற்றிருந்தனர்.

இந்த நிலையில் துருக்கியை சேர்ந்த 2 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இவர்களும் லண்டன் தகுதி போட்டியில் பங்கேற்றவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

“டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டிகளுக்கான குத்துச்சண்டை தகுதிகான் போட்டிகள் லண்டனில் அண்மையில் நடைபெற்றன.

இந்த போட்டியில் பங்கேற்றவர்களுக்கு கொரோனா தொற்றியுள்ளதனை அடுத்து மூன்று நாட்களின் பின்னர் அந்த தகுதிகான் போட்டிகள் இடைநிறுத்தப்பட்டது.

இந்த நிலையில், துருக்கியின் தலைமை பயிற்சியாளருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது.

அவர் மருத்துவ ஆலோசனைகளை பின்பற்றுவதை மறுத்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சர்வதேச ஒலிம்பிக்ஸ் சபையின் லண்டன் அமைப்பாளர் இடைநிறுத்தப்பட்டுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுவரை மொத்தமாக 6 பேர் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் குத்துச்சண்டை ஏற்பாட்;டாளரை இடைநிறுத்த சர்வதேச ஒலிம்பிக்ஸ் சபை தீர்மானித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
Top