Hirunews Logo
%E0%AE%86%E0%AE%9F%E0%AF%88+%E0%AE%89%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%9F%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81
Sunday, 29 March 2020 - 19:04
ஆடை உற்பத்தியாளர்களுக்கு பாரிய பொருளாதார பின்னடைவு
65

Views
கொரோனா வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்தும் நோக்கில் விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் காரணமாக தைக்கப்பட்ட ஆடை உற்பத்தியாளர்கள் பாரிய பொருளாதார பின்னடைவை எதிர்நோக்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு வர்த்தக கட்டளைகள் ரத்து செய்யப்பட்ட நிலையில், ஆடை உற்பத்தி நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளன.

இதன்காரணமாக பல ஆடை உற்பத்தி தொழிற்சாலைகளை மூட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் உள்ள காரியாலயங்கள் மூடப்பட்டதன் காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக தைக்கப்பட்ட ஆடை ஏற்றுமதியாளர் சங்கத்தின் தலைவர் ரெஹான் லக்ஹண்டி தெரிவித்துள்ளார்.

எவ்வாறிருப்பினும், இலங்கை முதலீட்டு சபையினால் கடந்த வியாழக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையில், முதலீட்டு சபையின் கீழ் உள்ள ஆடை உற்பத்தி தொழிற்சாலைகள் மூடவேண்டிய நிலை ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்;டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
Top