Hirunews Logo
%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-+%E0%AE%8E%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF
Monday, 06 April 2020 - 7:36
கொரோனா போராட்டத்தில் பிரித்தானியா வெற்றி பெறும்- எலிசபெத் மகாராணி
822

Views
கொரோனா வைரஸ் பரவலுக்கு எதிரான போராட்டத்தில் பிரித்தானியா வெற்றிபெறும் என பிரித்தானிய மகாராணி எலிசபெத் தெரிவித்துள்ளார்.

நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரையின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்க விதிகளை பின்பற்றிய மக்களுக்கு நன்றி தெரிவித்ததோடு, மற்றவர்களுக்கு உதவ ஒன்றாக முன்வந்துள்ளவர்களையும் அவர் இதன்போது பாராட்டியுள்ளார்.

நாம் இதற்கு முன்னர் பல சவால்களை எதிர்கொண்டிருந்தாலும் இது வேறுப்பட்ட சவால்.

இந்த நேரத்தில் உலகெங்கிலும் உள்ள அனைத்து நாடுகளுடனும் ஒரு பொதுவான முயற்சியில் இணைகிறோhம்.

இந்த நிலைமை சீராகி நாம் அனைவரும் விரைவில் வழமையான வாழ்க்கைக்கு திரும்புவோம் என பிரித்தானிய மகாராணி எலிசபெத் தமது விசேட உரையின் போது நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இதேவேளை, பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜொன்சன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகி 10 நாட்களுக்கு பின்னர் அவர் மருத்துவ பரிசோதனைகளுக்காக இவ்வாறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

மருத்துவரின் ஆலோசனைக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜொன்சன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றால் கடந்த 24 மணித்தியாலங்களில் அமெரிக்காவில் அதிகளவானோர் பலியாகியுள்ளனர்.

இதற்கமைய அங்கு புதிதாக ஆயிரத்து 154 பேர் பலியாகியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

அத்துடன் அங்கு குறித்த தொற்றால் இதுவரை 9 ஆயிரத்து 605 பேர் பலியாகியுள்ளதுடன் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 36 ஆயிரத்து 327 ஆக அதிகரித்துள்ளது.

அதேநேரம் அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக ஸ்பெயினில் புதிதாக 694 பேர் கொவிட் 19 தொற்றால் பலியாகியுள்ளதுடன் அங்கு இதுவரை உயிரிழந்துள்ளவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 641 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் அங்கு இந்த தொற்றால் இதுவரை 1 லட்சத்து 31 ஆயிரத்து 646 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கமைய சர்வதேச ரீதியில் கொரோனா வைரஸ் தொற்றால் பலியாகியுள்ளவர்களின் எண்ணிக்கை 69 ஆயிரத்து 413 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் இதுவரை 12 லட்சத்து 72 ஆயிரத்து 514 பேர் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதேநேரம் உலகலாவிய ரீதியில் 2 லட்சத்து 61 ஆயிரத்து 485 பேர் கொரோன வைரஸ் தொற்றில் இருந்து முழுமையாக குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
Top