Hirunews Logo
%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81..%21
Tuesday, 07 April 2020 - 8:17
பேருவளை பகுதியில் உள்ள நபரொருவருக்கும் கொரோனா தொற்று..!
13,596

Views
பேருவளை, வெத்திமராஜபுர பகுதியில் வீடடில் சுய தனிமைப்படுத்தலை நிறைவு செய்த ஒருவருக்கு கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அவர் சுய தனிமைப்படுத்தலை நிறைவு செய்ததன் பின்னர் 6 நாட்களை கடந்த நிலையில் இவ்வாறு நோய்த்தொற்றுக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த நபர் கடந்த மார்ச் மாதம் 16 ஆம் திகதி இந்தோனேசியாவில் இருந்து நாட்டிற்கு வந்திருந்த நிலையில் காவற்துறையினரின் தலைமையில் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்ததாக குறிப்பிடப்படுகிறது.

இதேவேளை, நேற்றைய தினம் குறித்த பகுதியில் உள்ள மூன்று பேரின் உயிரியல் மாதிரிகள் பெறப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த நிலையில் அவர்களில் ஒருவருக்கு இவ்வாறு நோய் தொற்று கண்டறியப்பட்டதாக பேருவளை சுகாதார வைத்திய அதிகாரி வருண செனவிரட்ன குறிப்பிட்டுள்ளார்.

இதேநேரம் தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் சுயதனிமைப்படுத்தலில் ஈடுப்பட்டிருந்த ஒருவருக்கும் கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்டது.

அவர் மத்துகமை பகுதியைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
Top