Hirunews Logo
%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D+19+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D..%21
Tuesday, 07 April 2020 - 10:27
கொவிட் 19 காரணமாக இலங்கையின் ஆறாவது மரணம்..!
30,258

Views
நாட்டில் கொரோனா தொற்றுறுதியான நிலையில் சிகிச்சை பெற்றுவந்த 6 வது நபர் உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் கடந்த மாதம் 27 ஆம் திகதி தேசிய தொற்று நோயியல் நிறுவகத்தில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உயிரிழந்ததாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அணில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

உயிரிழந்தவர் தெஹிவளை பகுதியைச்சேர்ந்த 80 வயதுடையவர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் உயிரிழந்தவரின் மனைவி மற்றும் பேரன் ஆகியோருக்கு கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்ட நிலையில் அவர்கள் இரண்டு பேரும் தற்சமயம் ஐ.டி.எச் எனப்படும் தேசிய தொற்று நோயியல் நிறுவகத்தில் சிகிச்சை பெற்றுவருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை இன்றைய தினம் மேலும் இரண்டு கொரோனா தொற்றுறுதியார்கள் அடையாளம் காணப்பட்டனர்.

இதன்படி, இதுவரையில் நாட்டில் கொரோனா தொற்றுறுதியானவர்களின் எண்ணி;க்கை 180 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவி;க்கப்பட்டுள்ளது.

அத்துடன் 137 பேர் தொடர்ந்தும் மருத்துவ கண்காணிப்பில் உள்ளதாக குறிப்பிடப்படப்பட்டுள்ளது.

அதேநேரம், 38 பேர் இதுவரையில் பூரண குணமடைந்த நிலையில் சிகிச்சைகளின் பின்னர் வீடு திரும்பியுள்ளதாகவும் சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் தடுப்பு பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றுறுதியான மேலும் இரண்டு இலங்கையர்கள் பிரித்தானியாவில் உயிரிழந்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

லண்டன் பெக்டன் பகுதியில் வசித்த 72 வயதுடையவரும், லன்டன் வடக்கு பகுதியில் எட்மண்டன் பகுதியில் வசித்த 62 வயதுடையவருமே இவ்வாறு உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

அவர்களில் உயிரிழந்த 62 வயதுடையவர் எந்தவித நோய்தொற்றுக்கும் ஆளாகியிருக்கவில்லை எனவும் அத்தியாவசிய சேவைகள் நிமித்தம் அவர்; கடமையில் ஈடுப்பட்டிருந்ததாகவும் குறிப்பிடப்படுகிறது.

இந்த நிலையில், அவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்னர் கொரோனா தொற்று ஏற்பட்டிருந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்னர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
Top