Hirunews Logo
%E0%AE%A4%E0%AF%87%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88+%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D
Wednesday, 08 April 2020 - 7:52
தேயிலை சபை ஆரம்பிக்க உள்ள வேலைத் திட்டம்
136

Views
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மை உள்ள இலங்கையின் கறுப்பு தேயிலையை உலகம் முழுவதும் பிரசித்தப்படுத்தும் வேலைத் திட்டத்தை தேயிலை சபை ஆரம்பிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூக வலைதளங்கள், சஞ்சிகைககள் மற்றும் வெளிநாடுகளில் உள்ள இலங்கை தூதரக காரியாலயங்கள் மூலமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தேயிலை சபையின் தலைவர் ஜயம்பதி மொல்லிகொட தெரிவித்துள்ளார்.

கறுப்புத் தேயிலையில் நோய்த்தடுப்புக்கான இராசாயண பொருள் ஒன்று உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2003, 2004 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் சாஷ் வைரஸ் நோய் பரவலின் பின்னர், நிபுணர்கள் இது குறித்து தொடர்ந்து கவனம் செலுத்தினர்.

இதற்கமைய, கறுப்பு தேயிலையில் உள்ள இராசாயண பதார்த்தம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்ற ஒரளவான நிலைப்பாட்டுக்கு வந்திருந்தாகவும் தேயிலை சபையின் தலைவர் ஜயம்பதி மொல்லிகொட தெரிவித்துள்ளார்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
Top