Hirunews Logo
%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4+%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D
Wednesday, 08 April 2020 - 7:57
வியாபார நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்ல முடியாத நபர்களுக்கு நிவாரணம்
80

Views
ஊரடங்கு சட்டம் காரணமாக வியாபார நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்ல முடியாத நபர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டிய நிலை அரசாங்கத்துக்கு ஏற்பட்டுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நாட்டு மக்களுக்காக நேற்று ஆற்றிய விசேட உரையில் இதனைத் தெரிவித்துள்ளார்.

நாட்டில் முச்சக்கரவண்டி, பாடசாலை பேருந்துகள், சிற்றூர்திகளின் ஊடாக தொழிற்துறையை முன்னெடுக்கும் 15 இலட்சம் பேர் இருந்தனர்.

அவர்கள் அனைவருக்கும் தங்களது வாகனங்களுக்கான தவணைக் கொடுப்பனவை செலுத்துவதற்கான நிவாரணத்தை வழங்கியுள்ளதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை மத்திய வங்கி தற்போது சிறிய மற்றும் மத்தியதர வியாபாரங்களுக்கு நிவாரணங்களை வழங்க ஆரம்பித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

4 இலட்சத்து 10 ஆயிரம் பேர் வரை முதியோர் நிவாரணங்களை பெறுகின்றனர்.

எனினும் நாம் 4 இலட்சத்து 42 ஆயிரம் முதியோர்களுக்கு ஐயாயிரம் ரூபாய் என்ற அடிப்படையில் கொடுப்பனவை வழங்கியுள்ளோம்.

அதற்கு மேலாக அங்கவீனமானவர்களின் வாழ்வியல் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டியேற்பட்டது.

22 ஆயிரம் அங்கவீனமானவர்கள் அதற்கான கொடுப்பனவை பெற்று வந்தார்கள்.

மேலும் 38 ஆயிரம் பேருக்கு ஐயாயிரம் ரூபா வழங்கப்படுகின்றன.

விவசாயிகள் ஒரு இலட்சத்து 60 ஆயிரம் பேருக்கு நாம் கொடுப்பனவு வழங்கியுள்ளோம்.

அதேபோன்று 4 ஆயிரத்து 600 மீனவர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

25 ஆயிரம் சிறுநீரக நோயாளர்கள் காணப்பட்டார்கள்.

காத்திருப்புப் பட்டியலில் இருந்த 13 ஆயிரத்து 850 பேருக்கும் கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் ஓய்வூதியதாரர்கள் 6 இலட்சத்து 45 ஆயிரம் பேருக்கு ஓய்வூதிய கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது.

இந்த வைரஸ் பரவல் காரணமாக எங்களது நாட்டில் உற்பத்தி செய்யப்படும் ஆடைகளை ஐரோப்பிய நாடுகளுக்கு அனுப்புவது தடைப்பட்டுள்ளது.

அவ்வாறு தடைப்பட்டது நாட்டுக்கு வருமானம் கிடைக்கும் பிரதான வழியாகும்.

தற்போது சர்வதேசத்தில் தேயிலைக்கு ஏலம் எடுப்பது நிறுத்தப்பட்டுள்ளது. எங்களது தேயிலை, தேங்காய், இறப்பர் ஆகிய மூன்று உற்பத்திகளையும் வெளிநாடுகளுக்கு அனுப்ப முடியாது.

இத்தாலி, மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து பணியாளர்கள் அனுப்பும் பணம் எங்களது நாட்டின் பொருளாதாரத்தின் முக்கிய பங்கு வகிக்கின்றது.

அந்த வருமானமும் கொரோனா நோய் தாக்கம் காரணமாக இலங்கைக்கு கிடைக்காமல் தடைபட்டுள்ளதாகவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
Top