Hirunews Logo
%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D..%21
Wednesday, 08 April 2020 - 8:05
தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் பொரிஸ் ஜோன்சன்..!
282

Views
பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தொடர்ந்தும் தீவிர சிசிச்சை பிரிவில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றார்.

அவரது உடல் நிலை தற்போது தேறி வருவதாக அவரது பேச்சாளர்களில் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் அவர் தீவிரமாக கண்கானிக்கப்பட்டு வருவதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும் பிரித்தானிய பிரதமர் மன உறுதியுடன் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொவிட் 19 நோய்த்தொற்கு ஆளான அவர் நேற்று முன்தினம் இரவு முழுவதும் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் தங்கவைக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டிருந்தது.

55 வயதான அவருக்கு தற்போது பிராணவாயு வழங்கப்பட்டு, சிகிச்சையளிக்கப்படுகிறது.

எனினும் அவருக்கு வென்டிலேட்டர் கருவி இணைக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை உலக சுகாதார ஸ்தாபனம் சீனாவுக்கு சார்பாக செயற்படுவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

வெள்ளை மாளிகையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் உலக சுகாதார ஸ்தாபனத்திற்கு வழங்கிய நிதியை நிறுத்தவுள்ளதாகவும் அமெரிக்க ஜனாதிபதி; அறிவித்துள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்காவிடம் இருந்து உலக சுகாதார ஸ்தாபனத்தின் 58 மில்லியன் டொலர் நிதி வழங்கப்படுகின்றது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
Top