Hirunews Logo
%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2+%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8C%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D...%21
Thursday, 09 April 2020 - 9:14
சந்தைப்படுத்துவதில் பல அசௌகரியங்கள்...!
38

Views
சீவல் தொழிலை மேற்கொண்டு நாளாந்தம் குடும்ப வருமானத்தை பெற்று வாழ்வாதாரத்தை முன்னெடுத்துவந்த தொழிலாளர்கள் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைமையால் தமது தொழில் நடவடிக்கைகளை முன்னெடுத்து சந்தைப்படுத்துவதில் பல அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளதால் அவர்களுக்கு பெரும் வருமான இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அத்தகைய தொழில்துறையை முன்னெடுத்த தொழிலாளர்கள் தொடர்ந்தும் தொழிலை மேற்கொண்டு சந்தைப்படுத்துவதற்கான பொறிமுறை ஒன்று உருவாக்கப்பட்டு அதற்கான அமைச்சரவை அனுமதி பெறப்பட்டுள்ளதாக கடற்றொழில் மற்றும் நீரக வளமூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இது குறித்து நேற்றைய தினம் அமைச்சரவையின் கவனத்திக்கு கொண்டு சென்ற அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவரது ஊடகப்பிரிவு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பிடப்பட்டுள்ளது.

கொரோனா நோய் தொற்று பரவல் காரணமாக நாட்டில் அமுலில் உள்ள ஊரடங்கு சட்ட நடைமுறையால் குறித்த சீவல் தொழிலாளர்களால் பாரிய பிரச்சினைகளை எதிர்நோக்குவதாகவும் அவர் கூறியுள்ளார்.

Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
Top