Hirunews Logo
%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%A9+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%87%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF..%21
Friday, 10 April 2020 - 8:42
வேதன குறைப்புக்கு இணக்கம் வெளியிட்ட ரியல் மட்ரிட் அணி..!
269

Views
கொரோனா வைரசால் கால்பந்து கழகங்கள் மிகப்பெரிய அளவில் இழப்பை சந்தித்ததால் ரியல் மட்ரிட் அணி வீரர்களும் 20 சதவீத வேதன குறைப்புக்கு இணக்கம் வெளியிட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஐரோப்பிய நாடுகளில் நடைபெறும் கால்பந்து லீக் போட்டிகள் அனைத்தும் பிற்போடப்பட்டுள்ளன.

இந்த நிலையில் போட்டிகள் எப்போது ஆரம்பமாகும் என்பதை உறுதியாக கூறு முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

ஒவ்வொரு கழகங்களில் விளையாடும் முன்னணி வீரர்கள் கோடிக்கணக்கில் வேதனம் பெறுபவர்கள்.

போட்டி நடைபெறவில்லை என்றாலும் அவர்களுடைய ஒப்பந்தத்தின்படி வேதனம் வழங்க வேண்டும்.

இதனால் கல்பந்து கழகங்கள் மிகப்பெரிய இழப்பை சந்திக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.

இந்த இழப்பை ஈடு செய்யும் வகையில் வீரர்களின வேதனத்தில் குறைப்பு செய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் ஸ்பெயினில் நடைபெறும் லா லிகா  தொடரில்; பார்சிலோனா கழகத்திற்காக விளையாடும் நட்சத்திர வீரர் மெஸ்சி வேதன குறைப்பு முடிவுக்கு இணக்கம் வெளியிட்டுள்ளார்.

இந்த நிலையில் ரியல் மட்ரிட் அணியின் வீரர்கள் 20 சதவீத வேதன குறைப்பை ஏற்றுக் கொண்டுள்ளனர்.

ஏற்கனவே லா லிகாவில் விளையாடும் நான்கு அணி வீரர்கள் வேதன குறைப்பை ஏற்றுக் கொண்ட நிலையில் ஐந்தாவதாக ரியல் மட்ரிட் வீரர்கள் இணக்கம் வெளியிட்டுள்ளனர்.

போட்டிகள் இத்துடன் முடிவடைந்தால் 20 சதவீத வேதனமும், சூழ்நிலை நன்றாகிய பின்னர் போட்டிகள் நடைபெற்றால் 10 சதவீத வேதனமும் குறைப்பு செய்ய இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
Top