Hirunews Logo
%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88...+%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87+%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81+%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81...%21
Friday, 10 April 2020 - 14:17
காரணங்களுக்கு இடமில்லை... இதுவே இறுதி முடிவு என்கிறது பாதுகாப்பு தரப்பு...!
59,728

Views
கொரோனா வைரஸ் தொற்று பரவும் அபாயம் மிக்க வலயங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளிலிருந்து ஏனைய பகுதிகளுக்கு செல்ல எந்த ஒரு காரணத்திற்காகவும் எவருக்கும் இடமளிக்கப்படாது என பாதுகாப்பு பிரிவு மீண்டும் அறிவித்துள்ளது.

பிரதி காவல் துறைமா அதிபர் அஜித் ரோஹன எமது செய்திபிரிவிற்கு இதனை தெரிவித்தார்.

அத்துடன் இன்று முதல் ஆரம்பமாகும் எதிர்வரும் ஒரு வாரக்காலப்பகுதியானது மக்கள் அவதானத்துடன் செயற்படவேண்டிய காலம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஊரடங்கு சட்ட அனுமதி பத்திரத்தை பயன்படுத்தி எதிர்வரும் சில நாட்களில் ஏனைய தேவைகளுக்காக வீதிகளில் பயணிக்க கூடாது எனவும் பிரதி காவற்துறை மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

அவ்வாறனவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
Top