Hirunews Logo
%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF+%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D...%21
Friday, 10 April 2020 - 15:54
பாகிஸ்தான் கிரிக்கட் வீரர்களுக்கு காணொளி மூலம் நடக்கவுள்ள விடயம்...!
55

Views
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வீரர்களின் உடற் தகுதி தேர்வு காணொளி மூலம் நடத்தப்படவுள்ளது.

பாகிஸ்தான் கிரிக்கெட் சபை இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது.

அணி வீரர்கள் உடற்தகுதியுடன் இருப்பது குறித்து பாகிஸ்தான் கிரிக்கட் சபை அதிக அக்கறை செலுத்தி வருகிறது.

சர்வதேச அளவிற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள தேர்வில் தோல்வியடைந்தால் அணியில் இடமில்லை என்ற கொள்கையை அந்த சபை கடைபிடித்து வருகிறது.

அந்தவகையில் வீரர்களுக்கான உடற்தகுதி தேர்வு கடந்த 23ஆம் மற்றும் 24 ஆம் திகதிகளில் நடத்தப்படவிருந்தது.

எனினும், கொரோனா வைரஸ் காரணமாக அந்த செயற்பாடு கைவிடப்பட்டது.

இந்தநிலையில், எதிர்வரும் 20 ஆம் மற்றும் 21ஆம் திகதிகளில் காணொளி மூலம் வீரர்களிடம் உடற்பயிற்சி தேர்வு நடத்தப்படும் என பாகிஸ்தான் கிரிக்கட் சபை அறிவித்துள்ளது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
Top