2வது ஜோன் போல் நல்லடக்கம் செய்யப்பட்ட தேவாலயத்தில் பாப்பரசர் பிரனான்சிஸ் ஆராதனை

Monday, 18 May 2020 - 18:51

2%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக கடுமையான கட்டுப்பாட்டின் கீழ் இருந்த இத்தாலி தற்போது வழமைக்கு திரும்புவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், புனித பீற்றர் பசிலிக்கா மற்றும் கத்தோலிக்க தேவாலயங்கள் முழு அளவில் இன்று திறந்து வைக்கப்பட்டன.

இரண்டாவது ஜோன் போல் நல்லடக்கம் செய்யப்பட்ட தேவாலயத்தில், பாப்பரசர் பிரனான்சிஸ், ஆராதனை ஒன்றினை மேற்கொண்டார்.

முன்னதாக பசிலிக்கா தேவாலயம் கடந்த வெள்ளிக்கிழமை கொரோனா வைரஸ் அற்ற இடமாக முழு அளவில் சுத்திகரிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

பின்னர் பொது மக்கள் தேவாலயத்திற்குள் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஆராதனை இடம்பெற்றது.

இந்த நிலையில், அரசாங்கத்தின் புதிய நடைமுறைகள் மற்றும் நோய் தொற்றினை தடுப்பதற்கான திட்டங்களுக்கு அமைய இத்தாலியில் உள்ள சகல தேவாலயங்களிலும் ஆராதனைகள் ஆரம்பமாகியுள்ளன.

ஆராதனைகளில் கலந்து கொண்டவர்களுக்கு விசேட உரையொன்றினை ஆற்றிய பாப்பரசர் பிரான்சிஸ், கொரோனா வைரஸ் தொற்றினை முற்றாக ஒழிப்பதற்கு ஏற்ற வகையில் உரிய பணிப்புரைகளுக்கு அமைய செயல்பட்டு பூரண ஒத்துழைப்பினை வழங்க வேண்டும் என தெரிவித்தார்.