Hirunews Logo
%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%9F%E0%AF%88%E0%AE%B5%E0%AF%88+%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81..
Thursday, 21 May 2020 - 8:49
பாரிய பின்னடைவை சந்திக்காது..
883

Views
கொரோனா வைரஸ் தொற்று உலகளாவிய ரீதியாக பரவியுள்ள போதிலும், இலங்கையின் தைக்கப்பட்ட ஆடை உற்பத்தி தொழில் பாரிய பின்னடைவை சந்திக்காதென தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
முன்னணி ஆடை உற்பத்தி நாடாக திகழும் சீனாவின் விநியோக வலைப்பின்னல் பாதிப்படைந்துள்ளதாக இலங்கை தைக்கப்பட்ட ஆடை உற்பத்தி ஏற்றுமதியாளர் சங்கத்தின் தலைவர் ரெஹான் தெரிவித்துள்ளார்.
 
தற்போது, தொற்றினை தடுக்கும் தைக்கப்பட்ட ஆடை உற்பத்தியிலேயே உலகளாவிய ரீதியாக ஏற்றுமதியாளர்கள் கவனம் செலுத்துகின்றனர்.
 
குறுகிய காலத்திற்கு இந்த பொருட்களுக்கு சிறந்த வரவேற்பிருப்பதாக தெரிவித்துள்ள அவர், தற்போது பெரும்பான்மையான நிறுவனங்கள் வழமையான பொருட்களை உற்பத்தி செய்யும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.
 
தொற்றினை தடுக்கக்கூடிய கையுறை, முகமூடி போன்ற மருத்துவ பொருட்களான கேள்விகள் இலங்கை ஏற்றுமதியாளர்களுக்கு கிடைக்கின்ற போதிலும், அவற்றை முழு அளவில் மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
 
குறிப்பாக இந்த மருத்துவ பொருட்களை உற்பத்தி செய்வதற்கான மூலப்பொருட்களை இறக்குமதி செய்வதில் உள்ள கட்டுப்பாடு மற்றும் கால விரயம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
 
 
 
 
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
Top