Hirunews Logo
65+%E0%AE%9A%E0%AE%A4+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF
Thursday, 21 May 2020 - 14:37
65 சத வீதத்தால் வீழ்ச்சி
867

Views
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த ஏப்ரல் மாதத்தில் வர்த்தக ஏற்றுமதி 65 சத வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது.

இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபையினால் இறுதியாக வெளியிடப்பட்ட புள்ளிவிபர தகவல்களுக்கு அமைய, கடந்த வருடம் ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடம் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பல் தொழிற்சாலைகள் தமது உற்பத்தி நடவடிக்கைகளை முற்றாகவோ அல்லது பகுதியாகவோ கட்டுப்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.

எப்படியிருப்பினும், அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் துரிதகதியிலான நடவடிக்கைகள் காரணமாக கால கிரமத்தில் வர்த்தக ஏற்றுமதி நடவடிக்கைகள் மேம்படுவதற்கான வாய்ப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
 
தைக்கப்பட்ட ஆடை ஏற்றுமதி காரணமாக கடந்த வருடம் ஏப்பிரல் மாதம் 356.20 மில்லியன் அமெரிக்க டொலர் வருவாய் கிடைத்தன.
 
இந்த வருடம் அதே காலப்பகுதியினில் 64.91 மில்லியன் அமெரிக்க டொலர்களே வருவாயாக கிடைத்தமை குறிப்பிடத்தக்கது.
 
இதேபோல தேயிலை, இறப்பர், தெங்கு பொருட்களின் ஏற்றுமதி நடவடிக்கைகளும் கணிசமான அளவு வீழ்ச்சி கண்டிருந்தன.

இதனிடையே கற்பிட்டி சுற்றுலா வணிக நடவடிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
 
 
 
 
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
Top