Hirunews Logo
%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B5%E0%AF%87+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D
Thursday, 21 May 2020 - 14:52
அரசாங்கத்தின் அனுமதிக்கமையவே திகதி அறிவிக்கப்படும்
984

Views
இருபதுக்கு இருபது கிரிக்கெட் அணிக்கான துடுப்பாட்ட பயிற்சியாளராக சர்வதேச கிரிக்கட் அனுபவம் அவசியமில்லை என இந்திய அணியின் முன்னாள் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
 
இந்திய ஊடகம் ஒன்றுக்கு அவர் வழங்கிய செவ்வியில் இதனை தெரிவித்துள்ளார்.
 
இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டிக்காக மாறுபட்ட துடுப்பாட்ட  பயிற்சியாளர்களை நியமிக்க முடியும்.
 
மனநிலையை சாந்தப்படுத்தி அமைதியாக வைத்திருத்தல், மனோத்திடம் மற்றும் துடுப்பாட்ட வீரர்கள் எட்ட வேண்டிய இலக்கு, பந்துகளுக்கு முகங்கொடுக்க வேண்டிய விதம் என்பவற்றை கற்றுக் கொடுப்பவதே துடுப்பாட்ட பயிற்சியாளரின் பொறுப்பாகும்.
 
எனவே குறித்த பயிற்சியாளர் சர்வதேச கிரிக்கட் போட்டிகளில் பிரபல்யமடைந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
 
இதேவேளை, அரசாங்கத்தின் அனுமதிக்கமையவே இந்திய ஐ .பி .எல் போட்டி திகதி அறிவிக்கப்படும் என அந் நாட்டு கிரிக்கட் கட்டுப்பாட்டு சபை தெரிவித்துள்ளது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
Top