Hirunews Logo
%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9....%3F
Friday, 22 May 2020 - 18:41
மாளிகாவத்தையில் உண்மையில் நடந்தது என்ன....?
7,173

Views
மாளிகாவத்தையில் சனநெரிசலில் சிக்கி நேற்றைய தினம் உயிரிழந்த மூன்று பெண்களின் மரணம் நெஞ்சுப் பகுதியில் ஏற்பட்ட பாதிப்புகளால் இடம்பெற்றுள்ளதாக இன்று இடம்பெற்ற பிரேத பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.

அத்துடன் குறித்த சம்பவத்தால் பாதிக்கப்பட்டுள்ள மேலும் ஒரு பெண் இன்று கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

60 வயதான பெண்ணே இவ்வாறு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கமைய சம்பவத்தில் பாதிப்படைந்துள்ள 6 பேர் தற்போது கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அவர்களில் 5 பேர் பெண்கள் என்பதுடன்இ அதில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள வர்த்தகர் உள்ளிட்ட 7 பேரும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தி எதிர்வரும் ஜூன் மாதம் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதற்கமைய அவர்களை நீர்கொழும்பு - பல்லன்சேன இளம்; குற்றவாளிகள் சீர்த்திருத்தும் மையத்தில் அனுப்புவதற்கான நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.

இதேவேளைஇ அகில இலங்கை இஸ்லாமிய மத அறிஞர்கள் சபைஇ மாளிகாவத்தை சம்பவத்தை கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

கொவிட் 19 தொற்றில் இருந்து பொது மக்களை பாதுகாப்பதற்காக அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வரும் நிலையில் அவற்றை பின்பற்றாது இடம்பெறும் இவ்வாறான சம்பங்கள் வருத்தமளிப்பதாக அந்த சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உள்நாட்டுச் செய்தி

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் சுகாதார பாதுகாப்பு வசதிகளை வழங்குவதற்கு 680 மில்லியன் ரூபாய் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளதாக கல்வியமைச்சர் டலஸ் அழகப்பெரு தெரிவித்துள்ளார்.

மாத்தறை மாவட்ட செயலகத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அனைத்து பாடசாலைகளுக்கும் உடல் வெப்பத்தை கணிக்கும் கருவிகள்இ கைகளை சுத்தப்படுத்துதற்கு தேவையான வசதிகள் மற்றும் முதல் உதவி நிலையங்களை வழங்குவதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என கல்வியமைச்சர் தெரிவித்துள்ளார்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
Top