Hirunews Logo
%E0%AE%A8%E0%AF%81%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0+%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88
Saturday, 23 May 2020 - 7:16
நுகர்வோர் அதிகார சபை வெளியிட்டுள்ள அறிக்கை
636

Views
சந்தையில் அரசிக்கான தட்டுப்பாடு ஏற்படுவதை தடுப்பதற்காக தங்களிடமுள்ள நெல் மற்றும் அரிசியை தட்டுப்பாடின்றி விநியோகிக்குமாறு நுகர்வோர் அதிகார சபை, வர்த்தகர்கள் மற்றும் அரிசி மொத்த சேகரிப்பாளர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

நுகர்வோர் அதிகார சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரிசியை பதுக்கி வைக்கும் நிறுவனங்கள் மற்றும் ஆட்கள் தொடர்பில் சுற்றி வளைப்புக்களை முன்னெடுக்கவுள்ளதாக அந்த அதிகாரி சபை தெரிவித்துள்ளது.

அண்மையில் அரிசிக்கான தட்டுப்பாடு ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

இந்தநிலையில், நெல் மற்றும் அரிசியை பதுக்கி வைப்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பிடியாணை இன்றி அவ்வாறானவர்களை கைது செய்ய முடியும் என்றும் நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.

அவ்வாறனவர்கள் தொடர்பில் நுகர்வோர் அதிகார சபையின் 1977 என்ற அவசர இலகத்திற்கு தொடர்பு கொண்டு முறைப்பாடு செய்யுமாறு அந்த அதிகார சபை பொது மக்களை கோரியுள்ளது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
Top