அதிகம் வருமானம் ஈட்டும் டென்னிஸ் வீராங்கனை பட்டியலில் நஹோமி ஒசாகா முதலிடம்

Saturday, 23 May 2020 - 7:20

%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%88%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%9F%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%88+%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%B9%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%BF+%E0%AE%92%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D
அதிகம் வருமானம் ஈட்டும் டென்னிஸ் வீராங்கனை பட்டியலில் ஜப்பான் டென்னிஸ் வீராங்கனை நஹோமி ஒசாகா முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.

இதனடிப்படையில் முதலிடத்திலிருந்த அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ் இரண்டாம் இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளார்.

இரண்டு முறை கிராண்ஸ்லாம் சாம்பியனான நஹோமி ஒசாகா கடந்த 12 மாதங்களில் 30 தசம் 7 மில்லியன் யூரோ வருவமானம் பெற்றுள்ளார்.

இந்த தொகை அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ் பெறும் வருமானத்தை விடவும் 1 தசம் 15 மில்லியன் யூரோ அதிகமானது என தெரியவந்துள்ளது.

அமெரிக்காவிலுள்ள வியாபார பத்திரக்கை ஒன்று வெளியிட்டுள்ள தரவின் அடிப்படையில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.