கொவிட் 19 வைரஸ் தொற்று சர்வேதச நாடுகளில் பரவி வரும் நிலையில், கொவிட் 19 காரணமாக உட்படுத்தப்பட்டுள்ள சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்படவுள்ளதால் கிரிக்கெட் போட்டிகளை மீண்டும் தொடங்குவது குறித்து சர்வதேச கிரிக்கெட் சங்கம் தொடர்ச்சியான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
மேற்கிந்திய தீவுகளின் சுற்றுப்பயணத்திற்கான பயிற்சியைத் தொடங்கவுள்ள இங்கிலாந்து அணிக்கு ஐ.சி.சி தொடர்ச்சியான வழிகாட்டுதல்களையும் வெளியிட்டுள்ளது.
குறித்த வழிகாட்டுதல்களில் ஒவ்வொரு குழுவின் ஆரோக்கியத்தையும் உறுதிப்படுத்த ஒரு தலைமை மருத்துவ அதிகாரியை நியமிக்க வேண்டுமென பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
மேலும், போட்டித் தொடர்களின் ஆரம்பத்திலும் முடிவிலும் 14 நாட்களுக்கு முன்னர் ஒரு தனிமைப்படுத்தப்பட்ட பயிற்சி முகாம் நடத்துமாறும், அதில் கொவிட் 19 சோதனைகள் மற்றும் வெப்பநிலை சோதனைகளை நடத்தவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.