கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த மேலும் 33 கடற்படை உறுப்பினர்கள்..!

Saturday, 23 May 2020 - 10:03

%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+33+%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88+%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D..%21
கொரோனா தொற்றுறுதியான 33 கடற்படை சிப்பாய்கள் பூரண குணமடைந்துள்ளனர்.

இதனடிப்படையில் கொரோனா தொற்றுறதியான 283 கடற்படையினர் குணமடைந்துள்ளதாக கடற்படை பேச்சாளர் இசுறு சூரியபண்டார தெரிவித்துள்ளார்.

இதேவேளை வெலிசர கடற்படை முகாமிலுள்ள தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் தனிமைத்தலுக்கு உட்படுத்தபட்டிருந்த 41 பேர் அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.

அவர்கள் இன்று தமது சொந்த இடங்களுக்கு திரும்பியுள்ளதாகவும் கடற்படை பேச்சாளர் இசுறு சூரியபண்டார தெரிவித்துள்ளார்.

இதேவேளை நாட்டில் நேற்றைய தினம் 13 கொரோனா தொற்றுறுதியானவர்கள் அடையாளங் காணப்பட்டுள்ளனர்.

சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு இதனை தெரிவித்துள்ளது.

நாட்டில் கொரோனா தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை ஆயிரத்து 68 ஆக அதிகரித்துள்ளது.

அவர்களில் 439 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இறுதியாக கொரோனா தொற்றுறுதியான நிலையில் அடையாளம் காணப்பட்ட 13 பேரில் 11 பேர் கடற்படையினர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இருவர் குவைத் மற்றும் மலேஷியாவிலிருந்து நாடு திரும்பிய இலங்கையர்கள் என அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றுறுதியாகியிருந்த மேலும் 16 பேர் குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து வெளியேறியுள்ளனா.

இதற்கமைய நாட்டில் கொவிட் 19 தொற்றில் இருந்து குணமடைந்துள்ளவர்களின் எண்ணிக்கை 620 ஆக அதிகரித்துள்ளது.

நாட்டில் பல்வேறு வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வந்த 16 பேர் இவ்வாறு குணமடைந்து வெளியேறியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது.