நீரில் மூழ்கி பலியான தலவாக்கலை இளைஞனின் ஜனாஸா..!

Saturday, 23 May 2020 - 10:40

%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B8%E0%AE%BE..%21
கொத்மலை நீர்தேக்கத்தில் தற்கொலை செய்து கொள்ள முயற்சித்த யுவதி ஒருவரை காப்பாற்ற சென்ற நிலையில் நீரில் மூழ்கிய உயிரிழந்த இளைஞரின இறுதி கிரியைகள் இன்று இடம்பெற்றது.

குறித்த நீர்த்தேக்கத்தில் நேற்று முன்தினம் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட யுவதி ஒருவரை காப்பாற்ற இளைஞர் நீரில் மூழ்கி காணாமல் போனார்.

பின்னர் நேற்று முன்தினம் மாலை அவர் சடலமாக மீட்கப்பட்டார்.

தலவாக்கலை - பாமஸ்டன் பகுதியை சேர்ந்த 32 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையான ஹமித் ரிஸ்வான் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தலவாக்கலை காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

இந்தநிலையில் அவரது ஜனாஸா தலவாக்கலை ரத்னகிரி மயானத்தில் மத அனுஷ்டானங்களுடன் இன்று இடம்பெற்றதாக எமது செய்தி தொடர்பாளர் குறிப்பிட்டார்.