பொதுமக்களுக்கு காவல்துறையினர் விடுக்கும் முக்கிய அறிவிப்பு

Saturday, 23 May 2020 - 12:43

%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
நாளை மற்றும் நாளை மறுதினம் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் சுமார் 900 தடுப்புக்கள் அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இன்று காலை ஹிரு தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “பத்தரே விஸ்தரே” நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இதேவேளை, இன்று காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாங்களில் ஊரடங்கு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 541 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காவல்துறை ஊடகப் பிரிவு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த காலப்பகுதியில் 138 வாகனங்களும் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதேவேளை கடந்த மாதம் 20 ஆம் திகதி முதல் இதுவரையில் ஊரடங்கு சட்டத்தை மீறிய 62 ஆயிரத்து 162 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது 17 ஆயிரத்து 460 வாகனங்களும் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டன.

அத்துடன் ஊரடங்கு சட்டத்தை மீறியமை தொடர்பில் இதுவரையில் காவல்துறையினரால் 18 ஆயிரத்து 992 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.