தேசிய பாதுகாப்பு பற்றிய தனது பொறுப்பை முழுமையாக நிறைவேற்றுவதாக ஜனாதிபதி தெரிவிப்பு

Saturday, 23 May 2020 - 13:18

%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
கிழக்கு மாகாணத்தில் தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை முறையாக மதிப்பீடு செய்து பாதுகாப்பதற்கு ஜனாதிபதி செயலணியொன்றை அமைக்கவுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு செயலாளரின் தலைமையில் இந்த செயலணி உருவாக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் அழிவடைவது குறித்து பல்வேறு தரப்பினர் விடயங்களை முன்வைத்து வருகின்றனர்.

இவை அனைத்தையும் கருத்திற்கொண்டு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை மையப்படுத்தி அவற்றை பாதுகாக்கும் விரிந்த நிகழ்ச்சித்திட்டமொன்றை தொல்பொருள் திணைக்களத்தின் உதவியுடன் நடைமுறைப்படுத்துவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

ஓவ்வொரு மாதமும் மூன்றாவது வெள்ளிக்கிழமை ஒன்றுகூடும் பௌத்த ஆலோசனை சபை இரண்டாவது தடவையாக நேற்று கூடியது.

இங்கு மகாசங்கத்தினரிடம் கருத்துத் தெரிவிக்கும் போதே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இதனை குறிப்பிட்டுள்ளார்.

ஏப்ரல் 30ஆம் திகதிக்கு பின்னர் சமூகத்தில் எந்தவொரு கொவிட் நோய்த் தொற்றுடையவரும் கண்டறியப்படாமை சுகாதார மற்றும் பாதுகாப்பு துறைக்கு கிடைத்த பெரும் வெற்றியாகும்

வெளிநாடுகளில் இருந்து வருவோர் நோய்த்தடுப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

அவர்களில் குவைட் மற்றும் டுபாய் நாடுகளில் இருந்து வருகை தந்த சிலர் கொவிட் நோய்த் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.

நாட்டுக்கு வருகை தருவோர் தொடர்பில் சுகாதார ஆலோசனைகளுக்கு ஏற்ப பாதுகாப்பு நிகழ்ச்சித்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாகவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தனது கொள்கை பிரகடனத்தில் முதன்மையான இடத்தையும் முன்னுரிமையையும் கல்விக்கே வழங்கப்பட்டுள்ளதோடு தேசிய கல்விக் கொள்கையொன்றை நடைமுறைப்படுத்தும் ஆரம்ப பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

தேசிய பாதுகாப்பு பற்றிய தனது பொறுப்பை முழுமையாக நிறைவேற்றுவதாகவும், அதற்காக திறமையும் இயலுமையும் கொண்ட அதிகாரிகளை நியமித்துள்ளதாகவும், ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

புலனாய்வுத் துறையை பலப்படுத்தி முழுமையான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அனைத்து தீவிரவாத, பயங்கரவாத குழுக்கள் குறித்தும் விசாரணை செய்வதற்கு பாதுகாப்பு தரப்புக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.