கல்வியமைச்சர் வெளியிட்டுள்ள செய்தி

Saturday, 23 May 2020 - 13:36

%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF
நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் சுகாதார பாதுகாப்பு வசதிகளை வழங்குவதற்கு 680 மில்லியன் ரூபாய் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளதாக கல்வியமைச்சர் டலஸ் அழகப்பெரு தெரிவித்துள்ளார்.

மாத்தறை மாவட்ட செயலகத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அனைத்து பாடசாலைகளுக்கும் உடல் வெப்பத்தை கணிக்கும் கருவிகள், கைகளை சுத்தப்படுத்துதற்கு தேவையான வசதிகள் மற்றும் முதல் உதவி நிலையங்களை வழங்குவதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என கல்வியமைச்சர் தெரிவித்துள்ளார்.