மேல்மாகாணத்தில் காவல்துறையினர் முன்னெடுத்த விசேட சுற்றிவளைப்பு

Saturday, 23 May 2020 - 13:56

%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%87%E0%AE%9F+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
மேல் மாகாண சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் தேசபந்து தென்னகோனின் ஆலோசனைக்கு அமைய, மேல் மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது 327 பேர் கைது செய்யப்பட்டதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

நேற்று காலை 6 மணி தொடக்கம் இன்று அதிகாலை 5 மணிவரை மேற்கொள்ளப்பட்ட விசேட கோதனை நடவடிக்கையின் போதே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஹெரோயின் போதைப்பொருளுடன் தொடர்புடைய 114 பேரும் சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபட்ட 108 பேரும் இதில் உள்ளடங்குவதாகவும் காவல்துறை ஊடகப்பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது.