வர்த்தகம் மற்றும் முதலீட்டை ஊக்குவிக்க நடவடிக்கை....!

Saturday, 23 May 2020 - 20:02

%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88+%E0%AE%8A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88....%21
கொவிட்19க்கு பின்னரான காலப்பகுதியில் இருதரப்பு வர்த்தக மற்றும் முதலீட்டை ஊக்குவிக்க இலங்கை இந்திய வர்த்தக அமைப்புக்கள் உறுதிப்பாட்டை ஏற்படுத்திக்கொண்டுள்ளன.

கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் இன்று வெளியிட்ட ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு வர்த்தக மன்றம் மற்றும் இலங்கை கைத்தொழில் மற்றும் வர்த்தக மன்ற சம்மேளனம் ஆகியவற்றுடன் இணைந்து இந்திய ஏற்றுமதி சங்கங்களின் சம்மேளனம் காணொளி மாநாடு ஒன்றினை ஏற்பாடு செய்திருந்தது.

இந்த கலந்துரையாடலில் கொழும்பிலுள்ள இந்தியக உயர்ஸ்தானிகராலயம் மற்றும் புதுடில்லியில் உள்ள இலங்கை உயர் ஸ்தானிகராலயம் ஆகியவற்றின் அதிகாரிகளும் கலந்துகொண்டிருந்தனர்.

கொவிட்19 காரணமாக ஏற்பட்டிருக்கும் சவால்களை எதிர்கொள்வதற்கு புதிய தந்திரோபாயங்களை உருவாக்கவேண்டிய தேவை இரு நாடுகளினதும் வர்த்தக சமூகத்துக்கு இருப்பதாக இதன்போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வர்த்தகர்கள் எதிர்கொள்ளும் சவால்களை குறைப்பதற்காக குறிப்பாக இலத்திரனியல் மூலச்சான்று பத்திரத்தை விநியோகித்தல் போன்ற புதிய மாற்று நடவடிக்கைகளை இலங்கை மற்றும் இந்திய அரசுகள் மேற்கொண்டுள்ளதாகவும் குறித்த காணொளி மாநாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.