Hirunews Logo
%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D+%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%93%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%87%E0%AE%9F+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF......%21+
Tuesday, 26 May 2020 - 16:32
விஜய் ரசிகர்களுக்கான ஓர் விசேட செய்தி......!
2,340

Views
லோகேஸ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய்யின் நடிப்பில் உறுவாகி வெளிவரவிருக்கும் திரைப்படம் மாஸ்டர்.

அனிருந் இசையமைத்த இந்த திரைப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்புக்கள் கடந்த மார்ச் மாதம் நிறைவடைந்ததை தொடர்ந்து ஏப்ரல் மாதம் 9 ஆம் திகதி படத்தினை வெளியிட படக்குழு தீர்மானித்திருந்தது.

எனினும்,கொரோனா அச்சுறுத்தல் ஏற்ப்பட்டதன் காரணமாக படம் வெளியிடுவது தற்காலிகமாக பிற்போடப்பட்டது.

நாடு முழுவதும் கொரோனா அச்சம் குறைவடையாத நிலையில், படத்தை வெளியிடுவது மேலும் தாமதமாகக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே ,எதிர்பார்ப்புடன் இருக்கும் விஜய் ரசிகர்களுக்காக குறித்த திரைப்படத்தின் டிரெய்லர் எதிர்வரும் ஜூன் மாதம் 22 ஆம் திகதி வெளியிடப்பட உள்ளது.

நடிகர் விஜய்யின் பிறந்த நாள் தினத்தன்று டிரெய்லரை வெளியிடுவது சிறந்தது என படக்குழு தீர்மானித்ததை அடுத்து இந்த அறிவிப்பு வழங்கப்பட்டதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மாஸ்டர் திரைப்படத்தில் நடித்த அர்ஜூன் தாஸ் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்திலும் இந்த விடயம் தொடர்பில் குறிப்பிட்டுள்ளார்.


Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
Top