இந்திய-அவுஸ்திரேலிய பகலிரவு டெஸ்ட் போட்டிகள் தொடர்பில் முக்கிய அறிவிப்பு

Friday, 29 May 2020 - 13:12

%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81+%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
அவுஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான பகல் இரவு டெஸ்ட் போட்டி திட்டமிட்டதற்கு அமைய நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி எதி;ர்வரும் நவம்பர் மாதம் முதல் ஜனவரி வரை மாதம் வரை அவுஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட தீர்மானித்துள்ளது.

இந்திய அணி அவுஸ்திரேலியாவிற்கு திட்டமிட்டபடி வரும் என்று அவுஸ்திரேலியா கிரிக்கெட் சபை அண்மையில் அறிவித்திருந்தது.

இதன்படி இந்திய மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் எதிர்வரும் டிசம்பர் மாதம் 3 ஆம் திகதி பிரிஸ்பேனில் ஆரம்பமாகவுள்ளது.