'கிரிக்கட் வெஸ்ட் இண்டீஸ்' அனுமதி அளித்துள்ளது....!

Saturday, 30 May 2020 - 20:51

%27%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D%27+%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%85%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%81....%21
எதிர்வரும் ஜூலை மாதம் இங்கிலாந்திற்கான மேற்கிந்திய தீவுகள் அணியின் கிரிக்கெட் சுற்றுப்பயணத்திற்கு கொள்கை அளவில் 'கிரிக்கட் வெஸ்ட் இண்டீஸ்' அனுமதி அளித்துள்ளது.

பணிப்பாளர் குழுவின் உறுப்பினர்களுக்கு இடையே இடம்பெற்ற தொலை காணொளி உரையாடலின் பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டள்ளது.

இதற்கு முன்னதாக இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கட் பிரதிநிதிகள் மற்றும் மருத்துவ நிபுணர்கள் உடன் மேற்கொண்ட விரிவான கலந்துரையடலில் பின்னர் இந்த அறிவிப்பினை மேற்கிந்திய தீவுகள் தரப்பினர் வெளிப்படுத்தியுள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து சம்பந்தப்பட்ட போட்டியில் பங்கு கொள்வோர் பார்வையாளர் உட்பட அனைத்து தரப்பினரின் பாதுகாப்பை உறுதிபடுத்துவதில் அதிக முன்னுரிமை வழங்கப்படும் என 'கிரிக்கட் வெஸ்ட் இண்டீஸ்' தெரிவித்துள்ளது.

எதிர்வரும் ஜூன் மாதம் 9 ஆம் திகதி இங்கிலாந்து வரும் மேற்கிந்திய தீவுகள் அணி மூன்று டெஸ்ட் போட்டிகளில் பங்குகொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கு அமைய முதலாவது போட்டி ஜூலை மாதம் ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.