12 நாள் பயிற்சி முகாம் குறித்து லங்கா கிரிக்கட் வெளியிட்டுள்ள தகவல்

Sunday, 31 May 2020 - 19:34

12+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D
இலங்கையை சேர்ந்த 13 தேசிய விளையாட்டு வீரர்களை கொண்ட குழுவினர் 12 நாள் பயிற்சி முகாமில் இணைந்து பயிற்சியினை பெறுவர் என “ஸ்ரீலங்கா கிரிக்கட்” தெரிவித்துள்ளது.
 
இந்த பயிற்சி முகாம் நாளை ஆரம்பமாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
 
ஆரம்ப பயிற்சிகள் பந்து வீசும் பயிற்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
கொழும்பு கிரிக்கட் கழகத்தில் தமது பயிற்சி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வீரர்கள் பயிற்சி காலத்தில் விருந்தகங்களில் தங்க வைக்கப்படுவர்.
 
வீரர்களின் உடல் தகுதிக்கான பயிற்சியினை தொடர்ந்து கள பயிற்சிகள் ஆரமப்பிக்கப்படும்.
 
நான்கு உறுப்பினர்களை கொண்ட குழு பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் உதவு பணியாளர்கள் விளையாட்டு வீரர்களுடன் இணைந்து செயல்படுவர்.
 
இந்த பயிற்சி முகாமில் கலந்து கொள்ளும் அனைவரது உடல் நலன்கள் விளையாட்டு அமைச்சு மற்றும் சுகாதார தரப்பினரது ஆலோசனைக்கு அமைய பேணப்படும் என “ஸ்ரீலங்கா கிரிக்கட்” தெரிவித்துள்ளது.